
தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று கடித்து குதறியதில் ஒரு மாத குழந்தை பலியானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோரூர் மண்டலம் மடிப்பள்ளி கிராமத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து 42 நாட்களே ஆன குழந்தையை தூங்கிக் கொண்டிருந்தபோது சரமாரியாக கடித்துக் குதறியுள்ளது.
மேலும், பலத்த காயமடைந்த அந்த ஆண் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமைனக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், குழந்தையின் தாய் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது வீட்டிற்குள் வந்த நாய் அந்த குழந்தை கடித்து குதறியதாகவும் தெரிவித்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நாய் கடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.