6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!

ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராதாகிருஷ்ணன் .

News image
அமைச்சர் ராதாகிருஷ்ணன்- (கோப்பு படம்)
Updated On :18 ஜூன் 2024, 11:27 am

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், சமீபத்தில் கேரளத்தில் ஒரேயொரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றிபெற்றவருமான கே. ராதாகிருஷ்ணன் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து, கேரள தேவஸ்வம் போர்டு, எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அவர், இம்மாத இறுதியில் புதுதில்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் அளித்தார்.

ராஜிநாமா கடிதத்தை அளித்த பின்னர் இதுகுறித்து பேசிய ராதாகிருஷ்ணன், மிகுந்த திருப்தியுடன் பதவி விலகுகிறேன். அமைச்சர் என்ற முறையில் மக்களுக்கு அதிகபட்ச சேவையை செய்ய முயற்சித்தேன்” என்றார்.

ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்வதற்கு முன்னதாக, பழங்குடியினரின் குடும்ப குடியேற்றங்களை விவரிக்க 'காலனி', 'சங்கேதம்' மற்றும் 'ஊர்' ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு குறிப்பிடத்தக்க உத்தரவைப் பிறப்பித்து இருந்தார். அதற்கு பதிலாக, அத்தகைய பகுதிகளை விவரிக்க 'நகர்', 'உன்னதி' மற்றும் 'பிரகிருதி' போன்ற சொற்களைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.

'காலனி' என்ற வார்த்தை காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளம். எனவே, இந்த பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆலந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 20,111 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.