
ஒடிஸா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக என்னைத் தேர்வு செய்துள்ளனர்.
மூத்த எம்.எல்.ஏ. பிரசன்ன ஆச்சார்யா எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பிரமிலா மாலிக், எதிர்க்கட்சித் தலைமை கொறடாவாகவும், பிரதாப் கேஷரி தேப் துணை கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
ஒடிஸாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.