16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு!

ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Iran names Mojtaba, son of Ayatollah Ali Khamenei, new Supreme Leader

மோஜ்தபா கமேனி (கோப்புப்படம்) - AP

Published On :

ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலின் மிரட்டலுக்கு மத்தியில், ஈரானின் மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபை அடுத்த உச்சத் தலைவரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

56 வயதான மோஜ்தபா, இனி ஈரானின் ராணுவம் மற்றும் புரட்சிகரப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன.

இதில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's Assembly of Experts has announced that Mojtaba Khamenei will succeed his slain father, Ayatollah Ali Khamenei, as the country's Supreme Leader, Iranian state media reported on Sunday, according to Reuters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.