
கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மனு மீதான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிபதி நியய் பிந்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
மருத்துவக் குழுவின் பரிசோதனையில் அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை காணொலி காட்சி மூலம் பங்கேற்க அனுமதிக்கக் கோரி அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, கேஜரிவால் மீண்டும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரின் காவல் ஜூலை 3 வரை நீட்டித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.