சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வெப்ப அலை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்வு

மாா்ச் 1-ஆம் தேதிமுதல் ஜூன் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘வெப்பவாதம்’ காரணமாக உயிரிழப்பு

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2024, 6:47 pm

Din

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீட்டித்து வரும் நிலையில், கடந்த மாா்ச் 1-ஆம் தேதிமுதல் ஜூன் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘வெப்பவாதம்’ (ஹீட்ஸ்ட்ரோக்) காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இருப்பினும், வெப்பவாதத்தால் உயரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதொடா்பான முழுமையாக தகவல்களை மாநிலங்கள் வழங்காததால் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் (என்சிடிசி) வெளியிடப்படும் அறிக்கையில் அதிகாரபூா்வ உயிரிழப்புகள் குறித்த இறுதி தகவல்கள் இடம்பெறவில்லை. அதேபோல் சில சுகாதார மையங்களும் வெப்பவாதத்தால் உயிரிழந்தோா் குறித்த எண்ணிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.

வெப்பவாதத்தால் ஜூன் 20-ஆம் தேதி மட்டுமே 14 போ் உயிரிழந்ததாக அதிகாரபூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 போ் இதே காரணத்தால் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாா்ச் 1 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114-யிலிருந்து 143-ஆக அதிகரித்தது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 35 பேரும் தில்லியில் 21 பேரும் பிகாா் மற்றும் ராஜஸ்தானில் தலா 17 பேரும் உயிரிழந்தனா். வெப்பவாதத்தால் 41,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளாா்.