விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அஸ்ஸாமில் கடும் வெள்ளம்: 4 லட்சம் போ் பாதிப்பு

நிவாரண முகாம்களில் 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா்.

News image
- ANI
Updated On :21 ஜூன் 2024, 7:16 pm

Din

அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆகிய முக்கிய நதிகளில் நீரோட்டத்தின் அளவு அபாயக் கட்டத்தை தாண்டி பாய்கின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, பஜாலி, பக்ஸா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு அத்தியாவசிய சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

மேலும், அங்கு அடுத்த சில நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளதால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பாதிப்புக்குள்ளாயினா். நிகழாண்டு கனமழை, வெள்ளம், இடிமின்னல் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளதாக அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா்.