நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தேன்: நடிகர் தர்ஷன் வாக்குமூலம்

கொலை சம்பவத்தில் தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கொடுத்ததாக நடிகர் தர்ஷன் ஒப்புதல்

News image

நடிகர் தர்ஷன்

Updated On :22 ஜூன் 2024, 1:11 pm IST

பெங்களூரு: ஒரு தீவிர ரசிகனின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், தடயங்களை அழிக்க ரூ.40 லட்சம் கடன்வாங்கிக் கொலையாளிகளுக்குக் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில்லாமல், ரேணுகாசாமி கொலை வழக்கில், காவல்நிலையத்தில் சரணடைந்தவர்களுக்கு ரூ.30 லட்சத்தை தர்ஷன் கொடுத்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நண்பர் ஒருவரிடம், தர்ஷன் ரூ.40 லட்சம் கடன் பெற்று, அதனை ரேணுகாசாமி கொலைக்கான தடயங்களை அழிக்க குற்றவாளிகளுக்குக் கொடுத்திருப்பதும், கொலை செய்தவர்களுக்கு ஒரு பெரிய தொகையும், காவல்நிலையத்தில் தாங்கள்தான் கொலை செய்ததாக மூன்று பேர் சரணடைய அவர்களுக்கு ரூ.15 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில், நடிகை பவித்ரா குறித்து மோசமான கருத்துகளை பதிவிட்டுவந்ததால், ரேணுகாசாமியை கடத்திக் கொலை செய்ய கன்னட நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா திட்டமிட்டு இந்தக் கொலையை நடத்தியிருக்கிறார்கள். இதில் தொடர்புடைய 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8ஆம் தேதி ரேணுகாசாமி என்ற ரசிகர் பெங்களூருவில் கொல்லப்படுகிறார். ஒரு தனிநபர் கொலையின் பின்னணியில், காவல்துறை விசாரணையைத் தொடங்கும் முன்பே, நால்வர் சரணடைகிறார்கள். சினிமா பாணியில் மிகவும் சவாலான இந்த கொலை வழக்கில், மிக சாமர்த்தியமாக துப்பு துலக்கிய காவல்துறையினர், யாருமே எதிர்பாராத வகையில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்ட 13 பேரை கைது செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் காவல்துறை துணை ஆணையர் கிரிஷ்தான் மிகவும் சாமர்த்தியமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின. இவருடன் விஜயநகரம் - காவல்துறை உதவி ஆணையர் சாந்தன் குமாரும் இணைந்து சின்னத் சின்ன சந்தேகங்களை வைத்து இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கைது செய்திருக்கிறார்கள்.

தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசாமி கொலை வழக்கில், நான்கு பேர் சரணடைகிறார்கள். இதில்தான் காவல் ஆணையர் கிரிஷ் சந்தேகம் கொள்கிறார். காரணம், இதுபோன்று சரணடையும் விவகாரங்கள் ரௌடிகளின் கொலையின்போதுதான் நடக்கும். ஆனால், ரேணுகாசாமியோ ரௌடி அல்ல. ஒரு தனிநபர்.

எனவே, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சரணடைந்தவர்களுக்கும் ரேணுகாசாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்த கொலையில் மிகப்பெரிய நபர்களுக்குத் தொடர்பிருப்பதை காவல்துறையினர் கண்டறிகிறார்கள்.

சரணடைந்தவர்களுக்கு பணம் கொடுப்பதாக பேரம் பேசியவர்களை தேடுகிறது காவல்துறை. விசாரணையில்தான் நடிகர் தர்ஷனின் நெருங்கிய உதவியாளர் வினய் என்பவரை காவல்துறை சுற்றிவளைக்கிறது. பிறகு காவல்துறை பாணியில் விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

கன்னட திரையுலகில் கரியா, கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா, கலாசிபாளையா, கஜா, நவகிரஹா, புல்புல், யஜமானா, ராபா்ட், காலாரே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவா் நடிகா் தா்ஷன். இவா், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி (33) என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

நடிகா் தா்ஷன் (46) ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவா், நடிகை பவித்ரா கௌடா (35) என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்ததுகுறித்து அறிந்துகொண்ட நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி, பவித்ரா கௌடா குறித்து மோசமான கருத்துகளை பதிவுகளை செய்து வந்துள்ளார். இதனால் பவித்ரா, ரேணுகாசாமியை கொலை செய்ய வேண்டும் என்று தர்ஷனை தூண்டியதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.