
ஜார்க்கண்டின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்புடையவர்களிடம் நில அபகரிப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் நடந்த சோதனையில் ரூ. 1 கோடி மற்றும் 100 துப்பாக்கி குண்டுகளை அமலாக்கத்துறையினர் சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
காங்கே சாலையில் உள்ள கமலேஷ் சிங் என்பவரிடம் இருந்து வெள்ளிக்கிழமை பணம் மற்றும் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீதான நில அபகரிப்பு தொடர்பான சில இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த விசாரணையில் அயுதச் சட்டத்தின் கீழ் 100 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட ஐஏஎஸ் அதிகாரி, முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் சாவி ரஞ்ஜன், பிரதாப் பிரசாத் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
ராஞ்சியில் ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் ராஞ்சியின் பர்கெய்ன் பகுதியில் 8.86 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள நிலங்கள் உள்பட ரூ.266 கோடி மதிப்பிலான நிலத்தின் மீது இதுவரை நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
48 வயதான ஹேமந்த் சோரன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் மீது நில அபகரிப்பு மோசடி குற்றம் சாட்டப்பட்டதை மறுத்துள்ளார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த சில நிமிடங்களில் அமலாக்கத்துறையால் ராஞ்சி ராஜ்பவனில் ஜனவரி 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.