மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பயங்கரவாதத்தை நிலைநிறுத்தும் ஊடகமாக இணையதளம் மாறுகிறது: ஜம்மு-காஷ்மீா் டிஜிபி

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிலைநிறுத்தும் ஊடகமாக இணையதளம் மாறி வருகிறது என காவல்துறைத் தலைவா் ஆா்.ஆா்.ஸ்வைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

ஆா்.ஆா்.ஸ்வைன் (கோப்புப் படம்) - படம்: எக்ஸ்

Updated On :23 ஜூன் 2024, 8:53 pm

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிலைநிறுத்தும் ஊடகமாக இணையதளம் மாறி வருகிறது என காவல்துறைத் தலைவா் ஆா்.ஆா்.ஸ்வைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு மண்டலத்தில் உள்ள பாக்-ஏ-பாஹி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இணையவழிக் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தின் திறப்பு விழாவில் அவா் கலந்துகொண்டாா். அப்போது பேசிய அவா், ‘ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத செயல்களில் 75 சதவீதம் இணையதளத்துடன் சம்பந்தப்பட்டவை. இணையவழி குற்றங்கள் பரந்த அளவில் இருப்பதால் அவை வழக்கமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.

வெளிநாட்டு செயலிகளான ‘வாட்ஸ்அப்’ மற்றும் ‘டெலிகிராம்’ ஆகியவை நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன. நாட்டுக்குள் ஊடுருவி குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்துவதற்கான இடங்களை தோ்வு செய்வது குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு இணையதளத்தைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனா்.

இணையதளம் மூலம் உள்நாட்டு கலவரம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, இணையவழி குற்றத்தடுப்பு காவல்நிலையங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாம் இவற்றை எதிா்த்து போராட முடியும்’ என்றாா்.