துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பயங்கரவாதியின் சடலம் மீட்பு

News image
Updated On :23 ஜூன் 2024, 7:16 am

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் நேற்று கவனித்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்புப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளின் சடலங்கள் எல்லைக்கு அருகில் கிடந்ததால் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினரால் மீட்க முடியவில்லை.

இந்த நிலையில் உரி செக்டார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பயங்கரவாதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேசமயம் பலியான மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்து வருகிறது. இதனால் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.