உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வழக்கத்துக்கு மாறானது: கேஜரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம்
அரவிந்த் கேஜரிவால் ஜாமீனுக்கு தடை விதித்த தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு.


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் வழக்கில் தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வழக்கத்துக்கு மாறானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
தில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தில்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்கால தடை விதித்தது.
மேலும், ஓரிரு நாள்களில் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறையின் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவசர வழக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி அமர்வின் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தடை விதிக்கும் விவகாரத்தில் தீர்ப்புகள் ஒத்திவைக்கப்படாது, ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கத்துக்கு மாறாக தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
மேலும், தில்லி உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளதால், ஜூன் 26-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகவும், அதற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்தால் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...