மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான பாஜகவின் பா்த்ருஹரி மகதாப் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
அதேநேரம், மக்களவை இடைக்கால தலைவா் பதவிக்கு கேரளத்தைச் சோ்ந்த 8 முறை காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் புறக்கணித்துவிட்டதாக, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்தது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதால், அவா் புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை மக்களவையின் 18-வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்

கைது செய்யப்பட்ட உறுப்பினா்களை விடுவிக்கக் கோரி இளைஞா் காங்கிரஸாா் சத்தியாகிரக போராட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் மாா்ச் 9-இல் விசாரணை
நாடாளுமன்றத்துக்கு மோடி வருவாரா? எம்பிக்களுடன் ராகுல் ஆலோசனை!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

