தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

பிரஜ்வல் ரேவண்ணா

படம் | ஐஏஎன்எஸ்

Updated On :24 ஜூன் 2024, 10:03 pm

Din

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஜதவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 3 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.), மே 31-ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து விசாரித்து வருகிறது. இதுவரை 22 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி. விசாரித்து வந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் காவல் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு திங்கள்கிழமை பிரஜ்வல் ரேவண்ணா ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, மற்றொரு பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸ் காவலில் ஒப்படைக்குமாறு எஸ்.ஐ.டி. கேட்டுக்கொண்டது.

இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா அடைக்கப்பட்டாா்.