அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்!

அமைச்சர் அதிஷி தைரியமானர். போராடத் தெரிந்தவர். தில்லி மக்களுக்காக போராடி வருகிறார்.

அகிலேஷ் யாதவ்

Published On :26 ஜூன் 2024, 11:50 am IST

தில்லியில் தண்ணீர்ப் பிரச்னைக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் அதிஷியை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் புதன்கிழமை சந்தித்தார்.

தில்லிக்கு திறந்துவிடப்படவேண்டிய பங்கு தண்ணீரை ஹரியாணா தர மறுத்து வருவதால், அதிஷி கடந்த 5 நாள்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த ஜூன் 25ல் அதிஷி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழப்பு, இரத்த சர்க்கரை அளவு குறைவு உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அதிஷிஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் மருத்துவமனைக்குச் சென்று அதிஷியை நேரில் சந்தித்தார். யாதவுடன் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உடன் இருந்தார்.

சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் எதிர்கட்சியான இந்திய கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்குப் பின்னர் அவர் கூறியதாவது..

அமைச்சர் அதிஷி தைரியமானர். போராடத் தெரிந்தவர். தில்லி மக்களுக்காக போராடி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து முதல்வர்களின் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு கேஜரிவாலுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் , அவர் வெளியே வராமல் இருக்க மத்திய அரசு அவருக்குத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.