47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு! தில்லி நிலை என்ன?

தில்லியில் பதிவான அதிக மழைப்பொழிவு: வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல்

News image
தில்லி சாரே கலே கான் பகுதியில் தேங்கிய வெள்ளநீரில் சாலையை கடக்கும் மக்கள்- PTI
Updated On :28 ஜூன் 2024, 9:21 am

DIN

வியாழக்கிழமை தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை தொடர்ந்துவருவதால் தில்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுமையம் தில்லியில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மறுநாள் (இன்று0 காலை 8.30 மணி வரை 228 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக தெரிவித்துள்ளது. 1936-க்கு பிறகு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவை தில்லி சந்தித்து வருவதாக வானிலை மையம் குறிப்பிட்டது.

ஜூன் மாதத்தில் வழக்கமாக 80.6 மிமீ மழையை தில்லி பெறும். தற்போதைய வெள்ளம் தேக்கம் நகரின் கட்டுமானத்திலும் குறிப்பாக கழிவுநீர் வடிகால் அமைப்பிலும் உள்ள போதாமையை காட்டுகிறது.

அடித்து வரப்பட்ட வெள்ளத்தால் சாலையில் கவிழ்ந்த கார்

அடித்து வரப்பட்ட வெள்ளத்தால் சாலையில் கவிழ்ந்த கார்

தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஜூன் 18-ம் தேதி தில்லி பருவமழையை சந்திக்க தயாராக உள்ளதாக பேட்டி கொடுத்திருந்தார். வெள்ளநீர் வடிகால் தூய்மையாகவும் தயாராகவும் உள்ளதாகவும் இடர்பாடுகளின்றி பருவமழையை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டு நாள்களாக பெய்த மழையால் தில்லியின் முக்கிய சந்திப்புகள் பலவற்றிலும் இரண்டு முதல் மூன்று அடிக்கு நீர் தேங்கியுள்ளது.

நொய்டாவிலும் இதே நிலை நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையால் வழக்கத்தை விட 3.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

இரண்டு மாதங்களாக நிலவிவந்த கடுமையான வெப்பத்தை தணிப்பதாக மழை இருப்பினும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.