பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

தில்லியில் கனமழை: மெட்ரோ ரயில்களில் கூடுதலாக 7 லட்சம் பேர் பயணம்

தில்லி மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதலாக 7 லட்சம் பயணிகள் பயணம்

News image
Updated On :29 ஜூன் 2024, 9:31 pm IST

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால், பல பகுதிகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட மற்றும் கடுமையான வெப்பத்திற்குப் பிறகு இறுதியாக பருவமழை தில்லியை வந்தடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், புதுதில்லியில் கடந்த 20 முதல் 30 மணி நேரத்தில் 228 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தில்லியில் ஜூன் மாத சராசரி மழைப்பொழிவைவிட 3 மடங்கு அதிகமாக மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தில்லியில் மெட்ரோ ரயில்களில் வழக்கத்தைவிட கூடுதலாக 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தில்லியில் மெட்ரோ ரயில்களில் 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.