அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாரணாசி: இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி யாகம்!

இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி யாகம் வளர்த்த ரசிகர்கள்.

News image
Updated On :29 ஜூன் 2024, 4:40 am

DIN

டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பார்படாஸ்ஸில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இந்திய அணி ரசிகர் யாகம் நடத்தி வழிபாடு செய்தனர்.

யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்ட அவர்கள் விராட் கோலி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் புகைப்படங்களுடன், இந்திய தேசிய கொடி மற்றும் கிரிக்கெட் பேட் ஆகியவை வைத்து வழிபாடு செய்தனர்.

மேலும், அவர்கள் பாரத் மாதாகி ஜே..! வந்தே மாதரம்..! என்றும் கோஷமிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் கடைசி ஆட்டத்தில் வெற்றிபெறுவது முக்கியமானதாகும். அதனால் தான் யாகம் வளர்த்து வழிபாடு செய்தோம். இந்த யாகத்தினால் அவர்களுக்கு வலிமை, ஆற்றல், சக்தி கிடைக்கும்” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.