தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர்.

News image
Updated On :29 ஜூன் 2024, 5:49 am

DIN

மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் 7 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “காட்வாஞ்சி கிராமத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற காரும், எதிர்திசையில் இருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியானவர்கள் மும்பை மற்றும் புல்தானா மாவட்டத்தில் உள்ள மலாட் பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்தில் மோதிய கார், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சாலையின் இடதுபுறத்தில் வந்து விழுந்தது.

காயமடைந்த மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.