உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!
படம் | பிடிஐ
Updated on
1 min read

முதன் முதலாக கடந்த 2007-ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது.

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டு இந்திய வீரர்களை மனமார வாழ்த்தியுள்ளார் தோனி.

தோனி கூறியிருப்பதாவது, ”2024 உலகக்கோப்பை சாம்பியன்கள்!” என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. அமைதியாக இருந்து சாதித்துக் காட்டினீர்கள், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டீர்கள்.

உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்த தருணம்: தோனி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!
இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!

உலகக்கோப்பையை தாயகம் கொண்டு வந்ததற்காக, தாயகத்திலிருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் அனைத்து இந்தியர்கள் சார்பாக உங்களுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்!

விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசளித்தமைக்காக நன்றி! எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் தோனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com