
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றினார்.
ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ’மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 30) உரையாற்றினார்.
குவைத் நாட்டின் தேசிய வானொலிப் பிரிவில், ஹிந்தி மொழியில் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இந்த முன்னெடுப்புக்கு அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 111வது பதிப்பில் இன்று(ஜூன் 30) பேசிய பிரதமர் மோடி, குவைத் வானொலியில் ஒலிபரப்பான ஹிந்தி நிகழ்ச்சியை மக்களுக்காக தனது உரையின் நடுவில் ஒலிபரப்பவும் செய்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ஞாயிற்றுக்கிழமைதோறும் 30 நிமிடங்கள் ஒலிபரப்பப்படும் ஹிந்தி நிகழ்ச்சி, இந்திய கலாசாரத்தின் பல்வேறு வண்ணங்களை உள்ளடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய கலாசாரம் இன்று உலகம் முழுவதும் புகழடைவது ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துர்க்மேனிஸ்தானில் அந்நாட்டு அதிபர் கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இந்தியாவுக்கு பெருமிதம் சேர்க்கும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.