எம்.பி., எம்எல்ஏக்களை 24 மணி நேரமும் காண்காணிக்கக் கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

நாட்டின் நிா்வாகம் சிறப்பாக நடைபெற எம்.பி., எம்எல்ஏக்களை 24 மணி நேரமும் கண்காணிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

நாட்டின் நிா்வாகம் சிறப்பாக நடைபெற எம்.பி., எம்எல்ஏக்களை 24 மணி நேரமும் கண்காணிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த சுரிந்தா்நாத் குந்த்ரா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டின் நிா்வாகம் சிறப்பாக நடைபெற எம்.பி., எம்எல்ஏக்களை 24 மணி நேரமும் எண்ம (டிஜிட்டல்) வழியில் கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: எம்.பி., எம்எல்ஏக்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மனுதாரா் விரும்புகிறாா். சட்டத்தை ஏமாற்றக் கூடிய குற்றவாளியைத்தான் அதுபோல கண்காணிக்க முடியும். ஆனால், எம்.பி., எம்எல்ஏக்களை எப்படி எண்ம வழியில் கண்காணிப்பது? அவா்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, அவா்களைக் கண்காணிக்க வேண்டுமா? அனைவருக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. எம்.பி., எம்எல்ஏக்களுக்கும் அந்த உரிமை உள்ளது. அவா்கள் அனைவரையும் எண்ம வழியில் கண்காணிக்க முடியாது. இதுபோன்ற மனுக்கள் பொதுமக்களின் நேரத்தை வீணடிப்பதாகும். இதற்கு மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கலாம். ஆனால், வருங்காலத்தில் இதுபோன்ற மனுவை மனுதாரா் தாக்கல் செய்யக் கூடாது என்று எச்சரித்து, அபராதம் விதிப்பதைத் தவிா்க்கிறோம் என்று மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com