ராகுலின் நடைப்பயணம் மார்ச் 10ல் மகாராஷ்டிரத்தில் நுழைகிறது!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மார்ச் 10-ம் தேதி மகாராஷ்டிரத்தில் நுழையவிருக்கின்றது.
ராகுலின் நடைப்பயணம் மார்ச் 10ல் மகாராஷ்டிரத்தில் நுழைகிறது!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மார்ச் 10-ம் தேதி மகாராஷ்டிரத்தில் நுழையவிருக்கின்றது.

ராகுலின் இந்திய ஒற்றுமை நிதி நடைப்பயணம் ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20-ல் நிறைவடைகின்றது.

இந்த நடைப்பயணம் நந்துர்பரில் இருந்து துலே, மாலேகான் மற்றும் நாசிக் வரை வரை பயணிக்க உள்ளது. அங்குப் புகழ்பெற்ற ராமர் கோயிலான காலாராம் கோயிலுக்கும், சிவபெருமான் கோயிலான திரியம்பகேஷ்வர் கோயிலிலும் வழிபாடு மேற்கொள்கிறார்.

பின்னர் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் நடைபெறும் பேரணியில் உரையாற்றுகிறார். பின்னர் மார்ச் 13, 14ல் நடைபெறும் இறுதி பொது பேரணிக்காக நடைப்பயணம் மும்பைக்குச் செல்லும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலையில் சொற்பொழிவுக்காகவும், தில்லியில் நடைபெறும் முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்ள நியாய யாத்திரை பிப். 26 முதல் மார்ச் 1 வரை இடைநிறுத்தப்படுகிறது.

மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் ராஜஸ்தானின் தோல்பூரில் இருந்து தொடங்கி அதே நாளில் மத்தியப் பிரதேசத்தில் நுழைய உள்ளது.

கிழக்கிலிருந்து மேற்காக மணிப்பூர்-மும்பை நடைப்பயணமானது 15 மாநிலங்கள் வழியாக 6,700 கிலோமீட்டர்கள் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com