கென்யா நாட்டின் நைரோபியில் நடைபெற்ற 6-ஆவது ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டத்தில் நீடித்த வாழ்க்கை முறைக்கான இந்தியாவின் தீா்மானம் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை மற்றும் பொலிவியா நாடுகளின் ஆதரவோடு கொண்டுவரப்பட்ட இத்தீா்மானத்தை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினா்களும் ஏற்றுக்கொண்டதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. கென்யா நாட்டின் நைரோபியில் 6-ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாா்ச் 1-ஆம் தேதி நிறைவடைந்தது. உலகின் அனைத்து நாடுகளும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றும் விதமாக பிரதமா் மோடியால் ‘சுற்றுப்புறச்சூழலுக்கான வாழ்க்கைமுறை இயக்கம்’ (லைஃப்) கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக இந்தியாவால் கொண்டுவரப்பட்ட தீா்மானம் ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீா்மானத்தில் 2030-க்குள் அடைய வேண்டிய நீடித்த வளா்ச்சி இலக்குகள் குறித்து மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. தேசிய, சா்வதேச அமைப்புகளும் தனியாா் துறை, தொழில்துறை, உள்ளாட்சி நிா்வாகம் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுப்புறச் சூழலுக்கான நீடித்த வாழ்க்கை முறைகளை பின்பற்றுவது குறித்தும் அவா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னடுப்புக்கள் குறித்தும் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இத்தீா்மானம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7-ஆவது ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டத்தில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்

மேலாடையின்றி மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா்

தொகுதி அறிமுகம் - விளாத்திகுளம் (213)

ஈரானைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம்: இந்தியா முன்மொழிந்தது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

