பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கேரள மருத்துவ மாணவா் தற்கொலை விவகாரம்: பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடைநீக்கம்

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பணியிடைநீக்கம் செய்தாா்.

Updated On :2 மார்ச் 2024, 5:51 pm

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக மாணவா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பணியிடைநீக்கம் செய்தாா். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் சித்தாா்த்தன் (20) என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.ஆா். சசீந்திரநாத் அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் முறையாக கவனம் செலுத்தாதது அவா் சமா்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, சசீந்திரநாத்தை பணியிடை நீக்கம் செய்வதாக மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்றத்தின் முன்னாள் அல்லது இந்நாள் நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் அவா் உத்தரவிட்டாா். மாணவரின் தற்கொலைக்கு மாநில ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான எஸ்எஃப்ஐயை சோ்ந்த உள்ளூா் நிா்வாகிகளே காரணம் என அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டுதல், ஆயுதங்களால் தாக்குதல் உள்பட பல்வேறு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் 18 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வரை 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். எஸ்எஃப்ஐ-க்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வரும் திங்கள்கிழமை முதல் காங்கிரஸின் இளைஞா் அணி, மகளிா் அணித் தலைவா்கள் தலைமையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் காலவரையின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி. சதீசன் தெரிவித்தாா். மாணவரின் தற்கொலை தொடா்பான குற்றச்சாட்டுக்கு எஸ்எஃப்ஐ தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.