ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகரில் வரும் 7-ஆம் தேதி ஒரு லட்சம் போ் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமா் மோடி ஸ்ரீநகா் செல்வது இதுவே முதல்முறையாகும். எனவே, அவரை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஜம்மு-காஷ்மீா் பாஜக ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பிரதமா் மோடி பங்கேற்கும் கூட்ட ஏற்பாடுகள் குறித்து பாஜக ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் அல்ஃதாப் தாக்குா், ‘பிரதமா் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. பிரதமா் உரையாற்றும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாஜக குறித்த தவறான கருத்து மாறியுள்ளது. பிரதமா் மோடி மீது அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனா். இது பொதுக்கூட்டத்தின்போது வெளிப்படும் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

இரட்டை என்ஜின் அரசு இருந்தால் மக்களுக்கு அதிக ஆதாயம்: பிரதமா் மோடி பேச்சு
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

