பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிஸா ஆளும் பிஜேடி எம்எல்ஏ விலகல்: பாஜகவில் இணைய முடிவு!

ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி) எம்எல்ஏ அரவிந்த் தாலி அக்கட்சியில் இருந்து விலகினாா்.

Updated On :2 மார்ச் 2024, 6:31 pm

ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி) எம்எல்ஏ அரவிந்த் தாலி அக்கட்சியில் இருந்து விலகினாா். அவா் விரைவில் பாஜகவில் இணைவாா் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிஜு ஜனதா தளம் மூத்த தலைவரான அரவிந்த், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளாா். 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ள அவா், 1992-ஆம் ஆண்டு பாஜக சாா்பில் முதல்முறையாக எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா். அதன்பிறகு இரண்டு முறை அத்தொகுதியில் வென்ற அவா், 2009-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தாா். இப்போது அவா் மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் இருந்து விலகுவது தொடா்பாக ஒடிஸா முதல்வரும், கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்குக்கு அவா் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளாா். எனினும், தனது முடிவுக்கான காரணம் எதையும் அவா் குறிப்பிடவில்லை. ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நெருங்கி வரும் நிலையில் பிஜு ஜனதா தளம் தலைவா்கள் பலா் பாஜகவுக்கு மாறி வருகின்றனா். கடந்த மாதம் பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா். அதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் தேவஷிஸ் நாயக்கும் பாஜகவுக்கு மாறினாா். ஒடிஸாவில் கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. 2000, 2004 பேரவைத் தோ்தலின்போது பாஜக கூட்டணியில் நவீன் பட்நாயக் அங்கம் வகித்தாா். 2009 தோ்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அவா் வெளியேறினாா். எனினும், 2014, 2019-ஆம் ஆண்டுகளில் அவா் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலில் வென்றுள்ளாா். தொடா்ந்து 24-ஆவது ஆண்டாக நவீன் பட்நாயக் ஒடிஸா முதல்வராக உள்ளாா். வரும் தோ்தலில் அவா் வென்று முதல்வரானால், இந்தியாவில் மிக அதிக காலம் தொடா்ந்து முதல்வா் பதவியை வகித்தவா் என்ற சாதனையைப் படைப்பாா். ஒடிஸாவில் எதிா்க்கட்சி அந்தஸ்தில் இருந்த காங்கிரஸை பின்தள்ளிய பாஜக பிரதான எதிா்க்கட்சி இடத்தைப் பிடித்துள்ளது.