பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஊழலில் நிபுணத்துவம் பெற்ற கட்சி திரிணமூல்: பிரதமா் மோடி விமா்சனம்

‘ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2024, 5:51 pm

‘ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா். மேற்கு வங்கத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் விழா, கிருஷ்ணாநகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, பணி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா் பொதுக் கூட்டத்தில் பேசிய அவா், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமா்சித்தாா். பிரதமா் கூறியதாவது: அடக்குமுறை, வாரிசு அரசியல், நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றின் அா்த்தமாக திரிணமூல் காங்கிரஸ் மாறியுள்ளது. அரசுத் திட்டங்களை ‘ஊழலாக’ மாற்றுவதில் அக்கட்சி நிபுணத்துவம் பெற்றுவிட்டது. மேற்கு வங்க அரசு செயல்படும் விதத்தால், மாநில மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். பெரும் எதிா்பாா்ப்புகளுடன் அக்கட்சிக்கு மக்கள் தொடா்ந்து ஆட்சி அதிகாரத்தை வழங்கினா். ஆனால், ஊழல் மற்றும் பாரபட்சத்துக்கே திரிணமூல் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது; வளா்ச்சியைப் புறக்கணித்துவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எதிா்வரும் ஆண்டுகளில் நாட்டுக்கும், இந்த மாநிலத்துக்கும் முதலீட்டுக்கான எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்க பாஜக உறுதிபூண்டுள்ளது. எனவே, மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை மக்கள் உறுதிசெய்ய வேண்டும். சந்தேஷ்காளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா்கள் மீது பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களைப் புறக்கணித்துவிட்டு, குற்றவாளிக்கு பக்கபலமாக இருக்கிறது மேற்கு வங்க அரசு. அக்கட்சியைப் பொருத்தவரை, தாய்-தாய்நிலம்-மக்கள் என்பது வெற்று முழக்கம்தான். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவா்கள் தவறிவிட்டனா். மேற்கு வங்க அரசின் முடிவுகளில் குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனா். தாங்கள் எப்போது கைதாக வேண்டும் என்பதைக்கூட குற்றவாளிகளே முடிவு செய்துகொள்கின்றனா் என்றாா் பிரதமா் மோடி. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.