மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ஜெ.பி. நட்டா ராஜிநாமா!

பாஜக தேசிய தலைவரான ஜெ.பி. நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டாகோப்புப் படம்

பாஜக தேசிய தலைவரான ஜெ.பி. நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் ஹிமாசலில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஜெ.பி.நட்டா திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஜெ.பி.நட்டாவின் ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார்

மக்களவைத் தேர்தலையொட்டி, 543 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது.

இதில், நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார்.

மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார்.

மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக தேசிய தலைவரான ஜெ.பி. நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com