லாலுவின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி: சமூகத் தளத்தில் ஒன்றிணைந்த பாஜகவினர்!

140 கோடி மக்களைக் கொண்ட நாடு முழுவதும் தனது குடும்பம்.
லாலுவின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி: சமூகத் தளத்தில் ஒன்றிணைந்த பாஜகவினர்!

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பிகார் முன்னாள் முதல்வர் விமர்சித்த நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக திரண்டுள்ளனர்.

பிகாரில் ஜன் விஸ்வாஸ் மஹா என்ற பெயரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நேற்று பேரணி நடத்தியது. அதில் லாலு பிரசாத் யாதவ் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அவர் உரையில்,

நாட்டில் வெறுப்புணர்வை மோடி பரப்பி வருகிறார். வாரிசு அரசியல் பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் கிடையாது. வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதையும், தனக்கு குடும்பம் இல்லாததையும் மோடி விளக்க வேண்டும். மோடி இந்து தானா என்று சந்தேகமாக உள்ளதாகவும் அவர் சரமாரி குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற தெலங்கானா பொதுக்கூட்டத்தில், என் தேசம் என் குடும்பம். 140 கோடி மக்களைக் கொண்ட நாடு முழுவதும் தனது குடும்பம். நான் இந்தியர்களுக்காக வாழ்கிறேன், எனக்காக அல்ல என்று லாலுவுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்திப்படுத்தும் அரசியலை வளர்ப்பதற்காகவும், குடும்ப அரசியலை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியக் கூட்டணி ஒன்றிணைந்து, தன்னை குறித்து அவதூறு பிரசாரத்தைப் பரப்பி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

சமூக வலைத்தளத்தில் மோடிக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் (மோடியின் குடும்பம்) என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் மோடியின் குடும்பம் என்ற சொல் ட்ரெண்டாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் கருத்து மற்றும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com