விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image
Updated On :4 மார்ச் 2024, 8:46 am

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மர்மநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மார்ச் 2 ஆம் தேதி, பாதுகாப்பு தலைமையகத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

அப்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுவார் எனக் கூறி, அந்த நபர் அழைப்பைத் துண்டித்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மர்மநபர் மீது மகாநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.