விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்!

நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்க உள்ளார்.

News image
Updated On :5 மார்ச் 2024, 7:03 am

ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 2.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலுக்குச் செல்கிறார்.

ஆளும் பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் ஜாஜ்பூரில் மாலை 4.15 மணிக்கு பாஜகவின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி பிப். 3ஆம் தேதி ஒடிசாவுக்குச் சென்று அங்கு ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.

சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.