ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகாகாளேஷ்வர் கோயிலில் ராகுல் வழிபாடு!

மகாகாளேஷ்வர் கோயிலில் ராகுல்காந்தி வழிபாடு மேற்கொண்டார்.

News image

மகாகாலேஷ்வர் கோயிலில் ராகுல்

Updated On :5 மார்ச் 2024, 10:53 am

DIN

காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் 52வது நாளாக இன்று நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தின் பினாகஞ்ச் பகுதியிலிருந்து நடைப்பயணம் தொடங்கிய நிலையில், இன்று சரங்பூரில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் ராகுல்காந்தி வழிபாடு மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் நடைப்பயணம் மார்ச் 20-ம் தேதியோடு நிறைவடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.