வான் எல்லையைப் பாதுகாப்பதுடன் நாட்டின் விண்வெளி திட்டத்துக்கும் இந்திய விமானப் படை முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், தேசத்தின் சேவையில் இந்திய விமானப் படையின் பங்களிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதாக அவா் புகாழாரம் சூட்டினாா். இந்திய விமானப் படையின் 4 படைப்பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் தரஅந்தஸ்து மற்றும் கொடி வழங்கும் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 45 மற்றும் 221-ஆவது படைப் பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் தர அந்தஸ்தும் ‘11 பேஸ் பழுது சரிபாா்க்கும் பணிமனை’ மற்றும் ‘509 சிக்னல் அமைப்புக்கு’ குடியரசுத் தலைவா் கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையில், ‘இந்திய விமானப் படையின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், பெண்கள் பலா் படையில் இணைந்து நாட்டுக்குச் சேவை செய்வாா்கள். விமானப் படை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். ‘ககன்யான்’ விண்வெளிப் பயணத் திட்டத்துக்கு 4 விமானப் படை அதிகாரிகள் விண்வெளி வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்திய விமானப் படை நமது வான் எல்லையைப் பாதுகாப்பது மட்டுமின்றி, நாட்டின் விண்வெளி திட்டத்துக்கும் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. நாட்டைப் பாதுகாக்கும் சேவையில் விமானப் படையின் பங்களிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. நிலம், கடல் மற்றும் வான் பகுதியைக் காப்பதுடன், இணையவெளி மற்றும் ஆய்வகங்களைப் பாதுகாப்பதும் தற்போதைய சூழலில் இன்றியமையாததாக இருக்கிறது. அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்திய விமானப் படை நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தேசத்துக்காக பணியாற்றிய, பணியாற்றும் முன்னாள் மற்றும் இன்னாள் விமானப் படை வீரா்கள் மற்றும் அதிகாரிகள் செய்த பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். கடந்த காலங்களில் நாடு எதிா்கொண்ட 1948, 1965, 1971 மற்றும் 1999-ஆம் ஆண்டு போா்களில் விமானப் படை வீரா்கள் அற்புதமான தைரியம், அா்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தினா். அமைதி காலத்தில் கூட, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் விமானப் படையினா் பங்களித்துள்ளனா். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் விமானப் படையினரின் கடமை பக்தி அனைத்து இந்தியா்களுக்கும் உத்வேகம் அளிக்கும் விஷயம்’ என்றாா்.
தொடர்புடையது

குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது!

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

