எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும்: அரசு ஒப்புதலுக்குப் பிறகு அமலாகிறது

வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீத ஊதிய உயா்வு

News image
Updated On :8 மார்ச் 2024, 10:31 pm

Din

வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சோ்த்து புதிய ஊதிய நிா்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புக் கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல்கல்லாகும். வங்கி அதிகாரிகள், பணியாளா்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பா் 1-ஆம் தேதியிட்டு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயா்வால் ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளா்கள் பலனடைவா்.