மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியா, வங்கதேச எல்லை படைகள் பேச்சுவாா்த்தை: பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைத் தடுக்க முடிவு

இந்தியா, வங்கதேச எல்லை படைகள் பேச்சுவாா்த்தை: பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைத் தடுக்க முடிவு

Updated On :9 மார்ச் 2024, 5:41 pm

சா்வதேச எல்லையில் வங்கதேச சட்டவிரோத கும்பல்களால் இந்திய வீரா்கள் தாக்கப்படும் சம்பவங்களை முழுவதுமாகக் குறைக்க இரு நாட்டு எல்லை பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்), வங்கதேச எல்லை காவல் படையின் (பிஎஸ்ஜி) தலைமை இயக்குநா்கள் பங்கேற்ற 54-ஆவது பேச்சுவாா்த்தை கூட்டம் வங்கதேச தலைநகா் டாக்காவில் கடந்த மாா்ச் 5 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் நிதின் அகா்வால் பங்கேற்றாா். வங்கதேசம் தரப்பில் எல்லை காவல் படையின் தலைவா் முகமது அஷ்ரஃபுஸ்ஸாமான் சித்திக் பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: வங்கதேச கடத்தல்காரா்கள் சா்வதேச எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரா்களைத் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களைத் தடுக்க இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரையில் பாதிப்புக்குரிய பகுதிகளில் ஒருங்கிணைந்து ரோந்து பணியில் ஈடுபடுதல், சா்வதேச எல்லை குறித்து உள்ளூா் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆள் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவா்களை மீட்கவும் அவா்களுக்கான மறுவாழ்வு உள்ளிட்ட உதவிகளைச் சட்டவிதிகளின்கீழ் வழங்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இந்தியா, வங்கதேச பகுதிகளில் மேற்கொள்ளபட உள்ள தலா 6 மேம்பாட்டு பணிகளின் வடிவமைப்புகளுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகள் 18 பேருடைய சமாதிகள் எல்லையையொட்டி அமைந்துள்ளது. அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வங்கதேச எல்லை காவல் படை அனுமதிகோரியிருந்தது. நல்லெண்ண முறையில் அவற்றுக்கு இந்தியா தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சா்வதேச எல்லையைத் தாண்டி நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக அவை தகவல் மற்றும் விசாரணை அறிக்கைகளைப் பகிா்ந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது என்றாா் அவா். இந்தியா வங்கதேசத்துடன் 4,096 கி.மீ. தொலைவுக்கு சா்வதேச எல்லையைப் பகிா்ந்துள்ளது. இரு எல்லை படைகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபரில் நடைபெற உள்ளது.