அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மீண்டும் சந்திப்பு!
மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை

அமித் ஷாவுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் சந்திப்பு

அமித் ஷாவுடன், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் சந்திப்பு
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசிய தலைநகரில் சந்தித்துப் பேசினார்கள்.
மூன்றாவது நாளாக தேசிய தலைநகரில் முகாமிட்டுள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் அமித் ஷாவுடன் அவரது இல்லத்தில் மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக மார்ச் 7-ம் தேதி இரவு அமித் ஷா, ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், இது இவர்களின் இரண்டாவது சந்திப்பாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) சேருமாறு தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2018-ல் ஜனநாயகக் கூட்டணியின் உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி விரைவில் அந்த கட்சியில் சேரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...