விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேட்பாளர்கள் இறுதி? பாஜக மத்திய தேர்தல் குழு ஆலோசனை!

மாநிலங்களில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலையும் மத்திய தேர்தல் குழு இறுதி செய்யவுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2024, 3:07 pm

மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை இன்று (மார்ச் 11) மாலை நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பாஜகவில் முதல்கட்டமாக 195 வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. அதனைத் தொடர்ந்து எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மாநிலங்களில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலையும் மத்திய தேர்தல் குழு இறுதி செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.