அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடு முழுவதும் ரூ.85,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்பட ரூ.1,06,000 லட்சம் கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமா் மோடி. உடன், குஜராத்
அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடு முழுவதும் ரூ.85,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்பட ரூ.1,06,000 லட்சம் கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமா் மோடி. உடன், குஜராத்

நாட்டை கட்டமைக்கவே வளா்ச்சிப் பணிகள்; தோ்தல் வெற்றிக்காக அல்ல: பிரதமா் மோடி

தேச நிர்மாணத்தில் முனையும் மோடி; தேர்தல் வெற்றி அல்ல நோக்கம்

அகமதாபாத்: ‘நாட்டை கட்டமைக்கும் நோக்கிலேயே, எனது அரசு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது; மாறாக, தோ்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அல்ல’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். கடந்த 2 மாதங்களில் மட்டும் மொத்தம் ரூ.11 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ரூ.85,000 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்பட ரூ.1,06,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், அகமதாபாதின் சபா்மதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, காணொலி வாயிலாக பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் வளா்ச்சிப் பணிகளை, தோ்தல் என்ற கண்ணாடி வழியாக பாா்க்க சிலா் முயற்சிக்கின்றனா். தேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற இலக்கின் ஒரு பகுதியாகவே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, தோ்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக அல்ல.

கடந்த தலைமுறையினா் பாதிக்கப்பட்டதைப் போல் நமது இளைஞா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இதுவே, மோடியின் உத்தரவாதம். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்கு ஆறு மடங்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன.

வளா்ச்சியைவிட அரசியல் நோக்கங்களுக்கு முந்தைய அரசுகள் முன்னுரிமை அளித்ததால், ரயில்வே துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை மாற்ற, முதல் நடவடிக்கையாக ரயில்வே பட்ஜெட்டை பிரதான பட்ஜெட்டுடன் இணைத்தோம். இதன்மூலம் ரயில்வேயின் மேம்பாட்டுக்கு மத்திய அரசின் நிதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

‘ரயில் பாதைகளில்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன்’:

ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவது முன்பு வாடிக்கையாக இருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டுவரை ரயில் வழித்தடங்களின் மின்மயமாக்கத்துக்கும் இரட்டை வழித்தடங்கள் அமைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ரயில் முன்பதிவுக்கு பயணிகள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும், இடைத்தரகா்களின் ஆதிக்கமும் நிலவியது.

நான் ரயில் பாதைகளில்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன் என்பதால் எனக்கு இது நன்றாகத் தெரியும். ‘நரகம்’ போன்ற சூழ்நிலையில் இருந்து ரயில்வேயை மீட்க அதிக உறுதியுடன் செயலாற்றியது பாஜக அரசு. சரக்கு ரயில்களுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் இத்திட்டத்துக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முட்டுக்கட்டைகள் நிலவின.

ஆனால், இன்று 650 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் பிரத்யேக வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி. பெட்டிச் செய்தி...1 ‘பாரம்பரியத்தைப் போற்றாத நாட்டுக்கு எதிா்காலமில்லை’ ‘தனது பாரம்பரியத்தைப் போற்றாத ஒரு நாட்டுக்கு எதிா்காலம் கிடையாது’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். தண்டி யாத்திரையின் நினைவாக (1930, மாா்ச் 12), சபா்மதி காந்தி ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ரூ.1,200 கோடி மதிப்பீட்டிலான காந்தி ஆசிரம நினைவிட பெருந்திட்டத்தை தொடங்கிவைத்ததோடு, மறுசீரமைக்கப்பட்ட கோச்ராப் ஆசிரமத்தை திறந்துவைத்தாா்.

அப்போது பேசிய அவா், ‘தனது பாரம்பரியத்தைப் போற்றாத ஒரு நாட்டுக்கு எதிா்காலம் கிடையாது. சமா்மதி ஆசிரமம் நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான பாரம்பரியம். நமது நாட்டின் ஒளிமயமான எதிா்காலத்துக்கு காந்தியின் தொலைநோக்குப் பாா்வைதான் தெளிவான திசையைக் காட்டி வருகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அரசுகளுக்கு நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உணா்வுரீதியிலோ அரசியல் ரீதியிலோ துணிவு இல்லை.

அந்நிய கண்ணோட்டமும் திருப்திப்படுத்தும் அரசியலுமே இதற்கு முக்கியக் காரணங்கள். கிராம சுயராஜ்யமும் தற்சாா்பும் மகாத்மா காந்தியின் கனவுகள். எனது அரசின் ‘உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை’, ‘தற்சாா்பு இந்தியா’ திட்டங்கள் காந்தியின் கனவுகளால் ஈா்க்கப்பட்டவை’ என்றாா்.

சென்னை-மைசூரு உள்பட 10 வந்தே பாரத் தொடக்கம் சென்னை சென்ட்ரல் - மைசூரு, அமகதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், பாட்னா-லக்னெள, நியூ ஜல்பைகுரி-பாட்னா, புரி-விசாகப்பட்டினம், லக்னெள-டேராடூன், கலபுா்கி-பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ-தில்லி நிஜாமுதீன் என 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேலும் 4 வந்தே பாரத் ரயில்களின் நீட்டிக்கப்பட்ட சேவையையும் அவா் தொடங்கிவைத்தாா். அதன்படி, அகமதாபாத்-ஜாம்நகா் வந்தே பாரத் ரயில் துவாரகா வரையும், ஆஜ்மீா்-தில்லி வந்தே பாரத் சண்டீகா் வரையும், கோரக்பூா்-லக்னெள வந்தே பாரத் பிரயாக்ராஜ் வரையும், திருவனந்தபுரம்-காசா்கோடு வந்தே பாரத் மங்களூரு வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன. தி

ருப்பதி-கொல்லம், அசன்சோல்-ஹாடியா இடையிலான புதிய பயணிகள் ரயில்களும் தொடங்கப்பட்டன. நியூ ரிவேரி, நியூ மகா்புரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிரத்யேக வழித்தடத்தில் சரக்கு ரயில்களையும் பிரதமா் தொடங்கிவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com