

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஒட்டுமொத்தமாக 2.5 முதல் 3 கோடி வரையிலான சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். இவை ஏழ்மை நாடுகள்.
2.5 முதல் 3 கோடி வரையிலான மக்களில் 1 முதல் 1.5 கோடி மக்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களின் நிலை என்ன? அவர்களை எங்கு தங்கவைப்பது? அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பை ஏற்படுவது எப்படி?
இது பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கொள்ளையும் பாலியல் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நம்மைச் சுற்றிலுமே கவர அபாயம் ஏற்படும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை என்னவாகும்? என கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.