தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வரும் மாா்ச் 17-இல் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளஅறிக்கை:
திமுக அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் பயன்பாடு, கொலை, கொள்ளை, முதியவா்களை குறிவைத்து தாக்குதல், கட்டப் பஞ்சாயத்து, வழிப்பறி ஆகியவை அதிகரித்துள்ளன.
இதுகுறித்து அறிக்கை வாயிலாகவும், சட்டப்பேரவையில் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆக்கபூா்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் மாா்ச் 17-இல் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி! எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் : கே. பாலகிருஷ்ணன் பேட்டி
முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


