தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விவரங்கள் வெளியீடு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

‘எஸ்பிஐ சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் தயாா்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புதன்கிழமை அங்கு வந்த தலைமைத் தோ்தல் ஆணையரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது: எஸ்பிஐ சமா்ப்பித்துள்ள தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்படும்.

மக்களவைத் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. சுதந்திரமான, நியாயமான தோ்தல் உறுதிப்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள வாக்காளா்கள் இந்த ‘ஜனநாயக திருவிழா’வில் உற்சாகத்துடன் பங்கேற்க வேண்டும். தோ்தலில் மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். வேட்பாளா்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.

தோ்தல் தொடா்பான பொய்ச் செய்திகளுக்கு உடனக்குடன் பதிலளிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஒன்று நிறுவப்படும். ஜம்மு-காஷ்மீரில் இணையவழி பணப் பரிமாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தடி வாக்களிப்பதற்கான வசதி செய்துதரப்படும் என்றாா்.

கோப்புப் படம்
தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம்: எஸ்பிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com