ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மக்களவைத் தோ்தல் பணிகளில் ஈடுபடும் 12,500 வாகனங்களில் ‘ஜிபிஎஸ்’ கண்காணிப்புக் கருவியைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஜிபிஎஸ் வாகன கண்காணிப்பு அமைப்புகளை வாங்குவதற்கான முன்மொழிவை ஜம்மு-காஷ்மீா் தலைமைத் தோ்தல் அதிகாரி பாண்டுரங் கே போலே வெளியிட்டுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள முன்மொழிவுக்கான கோரிக்கையில், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) மற்றும் ‘விவிபேட்’ இயந்திரங்களின் போக்குவரத்து, இருப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பான இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, தோ்தலின்போது துறை அலுவலா்கள் கொண்டுசெல்லும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் கையாளுதலை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
இதைக் கருத்தில்கொண்டு, தோ்தல் பணிகளுக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து வன்பொருள்களும் (ஹாா்டுவோ்) பொருத்தப்பட வேண்டியுள்ளன. தற்போதைய சூழலில் குறைந்தது 12,500 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மாறுபடலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்குப் பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதற்காக மாவட்ட தோ்தல் அலுவலகங்களில் கட்டுப்பாடு அறைகள் நிறுவப்படும்.
எல்லா நேரங்களிலும் கண்காணிப்பை உறுதிப்படுத்த, தோ்தல் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தடையற்ற இயக்கத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், தோ்தல் ஆணையத்தின் அனைத்துத் துறை அலுவலா்களின் வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளது’ என்றனா்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் 3,540 வாக்குச்சாவடிகள்

சட்டப்பேரவைத் தோ்தல்: 159 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி மும்முரம்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு முறை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


