

ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கியிருந்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கடைசியாக 2014ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 10ஆண்டுகளாக பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும் ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.