விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ம.பி.யில் ரயில்வே ஊழியர், மகன் கொலை: காதல் விவகாரமா?

தந்தை-மகன் இருவரும் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2024, 7:43 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது எட்டு வயது மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உள்பட்ட மில்லினியம் காலனியில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறந்தவர் ராஜ்குமார் விஸ்வகர்மா, அவரது மனைவி இறந்ததைத் தொடர்ந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில்,

முன்னதாக, விஸ்வகர்மாவின் சகோதரருக்கு பக்கத்து வீட்டுக்காரர் தனது தந்தையையும், சகோதரனையும் கொலை செய்துவிட்டதாக விஸ்வகர்மாவின் மகளிடமிருந்து குரல் செய்தி வந்தது. அதைத்தொடர்ந்து விஸ்வகர்மாவின் சகோதரர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த நபரின் உடலும், அவரது மகன் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்டதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

தந்தை-மகன் இருவரும் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அவரின் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மகளையும், பக்கத்து வீட்டு நபரையும் தேடி வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.