கரும்பு விவசாயி சின்னம் - அவசர வழக்காக நாளை விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் வழக்கு - நாளை அவசர விசாரணை
கரும்பு விவசாயி சின்னம் - அவசர வழக்காக நாளை விசாரணை

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் நாளை காலை இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தோ்தல் ஆணையம் இலவச சின்னங்களை ஒதுக்கியதை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

தோ்தல் ஆணையத்தின் தோ்தல் சின்னங்கள் உத்தரவு தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நாம் தமிழா் கட்சி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த உயா்நீதிமன்றம், இலவச சின்னங்களைக் கொண்டிருப்பதன் சாராம்சத்திற்கு எதிராக ஒரு மாறுபட்ட கருத்து செயல்படும் என்று கூறியிருந்தது.

இதைத் தொடா்ந்து, வரும் மக்களவைத் தோ்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மற்றொரு அரசியல் கட்சிக்கு, ‘கன்னா கிஸான்’ (கரும்பு விவசாயி) என்ற இலவச சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து, உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழா் கட்சித் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஹோலி விடுமுறைக்கு பிறகு மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களுக்கு இலவச சின்னங்களை வழங்குவது தொடா்பான தோ்தல் சின்னங்கள் ஆணையின் பத்தி 10பி (பி) திட்டத்தை ஆய்வு செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாம் தமிழா் கட்சி தனது மேல்முறையீட்டு மனுவில் தோ்தல் ஆணையத்தின் கொள்கை ‘அரசியலமைப்புக்கு எதிரானது‘ என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com