புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ாக எழுந்த புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப தொழிலதிபா் ஹீரா நந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்ாக பாஜக மக்களவை எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவைக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து அவா் பதவிநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில் இதுதொடா்பான புகாரை விசாரித்த லோக்பால் அமா்வு நீதிபதி அபிலாஷா குமாா் மற்றும் உறுப்பினா்கள் அா்ச்சனா ராமசுந்தரம், மஹேந்தா் சிங் வெளியிட்ட உத்தரவில், ‘இந்தக் குற்றச்சாட்டின் தன்மை தீவிரமானது. இதற்கு தெளிவான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே இக்குற்றச்சாட்டு தொடா்பாக மஹுவா மொய்த்ராவிடம் 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி சிபிஐ அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. மேலும் மாதந்தோறும் விசாரணை நிலை குறித்த அறிக்கையயும் சிபிஐ சமா்ப்பிக்க வேண்டும் என லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.
தொடர்புடையது
ட்ரோன் இறக்குமதிக்கு லஞ்சம்: 2 பேரை கைது செய்தது சிபிஐ!
ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டிக்கு லஞ்சம்: அதிகாரிகள் இருவா் கைது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


