ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:55 am

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ள வாக்குமூலம் அளிக்காத சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ் உள்பட பலரை வழக்கில் சோ்த்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள சில சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், புலன் விசாரணை நடத்திய அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத சாட்சிகள் பலா் இந்த வழக்கில் உள்ளனா். அவா்கள் தேவையில்லாத சாட்சிகள். எனவே, அவா்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.