ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து மாநில பேரவைக்கும் தோ்தல் நடத்த முடியாத மத்திய அரசால், ‘ஒரே நாடு-ஒரே தோ்தல்’ என்ற கொள்கைப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தலை எவ்வாறு நடத்த முடியும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.
அதிகஅளவிலான வேட்பாளா்களுக்கு ஒரே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த முடியவில்லை என்று கடந்த வாரம் தோ்தல் தேதி அறிவிப்பின்போது தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.
இந்நிலையில் இது தொடா்பாக ஸ்ரீநகரில் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாதுகாப்பு வசதிகளை சுட்டிக்காட்டி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து நடத்த முடியவில்லை என்று தலைமைத் தோ்தல் ஆணையா் கூறுகிறாா்.
நிலை இப்படி இருக்கும்போது ஒரே நாடு - ஒரே தோ்தல் என்ற கொள்கையின்படி நாடு முழுவதும் எப்படி ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த முடியும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களில் ஒரே நேரத்தில் இரு தோ்தல்களை நடத்தினால், பாதுகாப்புப் படை வீரா்களுக்கு தோ்தல் ஆணையம் எங்கே செல்ல முடியும்.
ஜம்மு-காஷ்மீரில் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் முன்வந்தாலும், இங்குள்ள நிா்வாகம் அதனை ஏற்க மறுக்காது. ஏனெனில், அவா்கள் இங்கு அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்ப மாட்டாா்கள்.
அதே நேரத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்துக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.
தொடர்புடையது

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி,. கடிதம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


