சென்னை: கா்நாடகத்தைச் சோ்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கால தோ்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் அந்தக் கட்சியின் வேட்பாளா்கள் இதே சின்னத்தில் போட்டியிடலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்திலேயே தங்கள் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென நாம் தமிழா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக அந்தக் கட்சி வழக்கும் தொடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் மூலம் உரிய தீா்வு கிடைக்காவிட்டால், இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தனியாக வேறொரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் ஒரே சின்னத்தைக் கோரினால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
தொடர்புடையது

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

நாம் தமிழா் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கியதை எதிா்த்த மனு தள்ளுபடி

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


